17வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்தோஷ் குமார் கங்வார் எட்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். 70 வயதான அவர் கடந்தமுறை தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார். உத்தரபிரதேச மாநிலத்தின் பைரேலி தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சந்தோஷ் குமார் கங்வார் நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.