நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்ட அமர்வு இன்று முதல் தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து 2020-2021ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது இரு கட்டங்களாக நடைபெறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து, இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்ட அமர்வு துவங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்ட அமர்வு வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.