நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி தொடக்கம்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், எம்.பி.க்கள் உள்பட 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி முடிவடைகிறது. கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்ற வளாகம் முழுவதையும் பாதுகாப்பான மண்டலமாக மாற்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு, எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் மட்டுமின்றி, இரு அவைகளின் ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எம்.பி.க்களுக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கொரோனா உபகரண பெட்டி வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்துக்குள் நுழைபவர்களை தொடாமலே பாதுகாப்பு சோதனையும், உடல்வெப்ப பரிசோதனையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version