நாடாளுமன்ற தேர்தல் :3வது நாளாக அதிமுக விருப்ப மனு விநியோகம்

நாடாளுமன்ற தேர்தலுக்காக, அதிமுக தலைமை அலுவலகத்தில் மூன்றாம் நாளாக வழங்கப்பட்டு வரும் விருப்ப மனுக்களை ஏராளமானோர் பெற்று வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் மூன்றாம் நாளாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4ம் தேதி முதல் வழங்கப்படும் விருப்ப மனுக்களை, முதல் நாள் அன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வழங்கி தொடங்கி வைத்தனர்.

மூன்றாம் நாளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் விருப்ப மனுக்களை ஏராளமான கட்சி நிர்வாகிகள் பெற்று வருகின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 10ம் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Exit mobile version