நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், மக்களவையும், மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது. அவை தொடங்கு முன்பே டெல்லி வன்முறை குறித்து விவாதிக்கும் வகையில், பல்வேறு உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ்களை வழங்கினர். மக்களவை கூடியதும், மறைந்த உறுப்பினர் பாய்தியானந்த் பிரசாத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.