நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டநிலையில், இன்று மீண்டும் கூடுகிறது.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஆகியவை நிறைவேற உள்ளது. இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க் கட்சிகளிடையே வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பிக்கள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version