பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய பொறியாளரை கண்ணீர் மல்க வரவேற்ற பெற்றோர்

கடந்த 6 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய பொறியாளரை அவரது பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த ஹமீது நிஹல் அன்சாரி என்ற பொறியாளர், பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை இணையதளம் மூலம் காதலித்தார். இதையடுத்து அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக ஆப்கானிஸ்தான் வழியாக கடந்த 2012ல் பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்ற அவரை, அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த வழக்கில் அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து கடந்த 6 ஆண்டுகளாக பெஷாவர் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை கடந்த 15ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அவரை இந்தியா அனுப்ப பெஷாவர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பெஷாவர் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். எல்லையில் உள்ள அதிகாரிகளிடம் ஹமீது அன்சாரி ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அங்கு காத்திருந்த அவரது பெற்றோர், அவரை கண்ணீர் மல்க வரவேற்றனர்.

Exit mobile version