கோவையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை, கஸ்தூரி நாயக்கன் புதூரில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், இது தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனையொட்டி, குழந்தையின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு காவல்துறையினர் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டனர்.
அப்போது கைது செய்யப்பட்டவர்களை காணொலி காட்சி மூலம் காண்பிக்குமாறு பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று விசாரணையில் உள்ள நபரை போலீசார் காண்பித்தனர். இதையடுத்து குழந்தையின் உடலை பெற்றோர் வாங்கிக் கொண்டனர்.
கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உடனடியாக தாமதமின்றி, சிறப்பு கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.