பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் -நடிகர் விவேக்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் பெண்கள் கல்லூரியில் கிரின் கலாம் நிறுவனம் மற்றும் அய்யன் திருவள்ளவர் திருவிழாவில் சார்பில் மரக்கன்று நடுதல் நூல் வெளியிட்டு விழா  நடைபெற்றது
 
அய்யன் திருவள்ளுவர் திருவிழா ஏற்படுகளை சேத்தூர் பகுதியை சேர்ந்த மனநல மருத்துவர் அர்சுணன் செய்திருந்தார். இவ்விழாவில் நடிகர் சிங்கம்புலி,நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கெண்டனர். இதில் பேசிய நடிகர் விவேக் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்கள் 2020ல் இந்தியா வல்லரசு நாடாக
வேண்டும் என்று கனவு கண்டார். அதன் ஒரு பகுதியாக 10 லட்சம் மரக்கன்றுகளை நட சொன்னார் நானும் இருப்பது மூன்று வருடத்திற்கு மேலான மரக்கன்றுகள் நட்டுள்ளேன். மாணவிகள் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பொழுது,  பாலியல் வன்கொடுமையில் சிறுமிகள் பாதிக்கப் படுகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். அவர்கள் யாருடன் பேசுகின்றனர், எங்கு செல்கின்றனர் என்பதை மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் பாலியல் கொடுமைக்கும் குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது சமூக வலைதளங்களே குற்ற சம்பவங்களுக்கு காரணம்.
 
இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் மரங்களை வெட்டக்கூடாது. மரங்கள் அழிக்கப்பட்டால் மீண்டும்  மரங்கள் வளர்க்க வேண்டும். கலாம் கண்ட இந்தியா வல்லரசு நாடாக மாற வேண்டும் என்ற கனவு மரம் வளர்ப்பதில் பின்தங்கியுள்ளது எனக்கூறினார்.

Exit mobile version