சிறுவர்களின் ஓட்டப் பயிற்சிக்கு பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என ரயில்வே காவல்துறை ஏடிஎஸ்பி சைலேந்திர பாபு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உடல் நல பராமரிப்பை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடைபெற்றது. 2 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு, சிறுவர்களின் ஓட்டப் பயிற்சிக்கு பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதிகமாக ஓடும் குழந்தைகளுக்குத்தான் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் வரும் என கூறிய அவர், உடல் நிலையை பராமரிக்க அனைவரும் ஓட வேண்டும் எனவும் சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.