நவீன எரிவாயு தகனமேடையை ஆய்வு செய்த பரமக்குடி எம்.எல்.ஏ

பரமக்குடியில் நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணியை சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வது வார்டு பகுதியில், ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பகுதியில், இறந்தவர்களின் உடலை புதைக்க போதிய வசதியில்லாமல் இருந்துள்ளது. கடந்த 2012-13ம் நிதியாண்டில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன எரிவாயு தகன மேடை கட்டப்பட்டது. தனியார் அமைப்பின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்த இது, 6 மாதங்களாக பராமரிப்பின்றி இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனையடுத்து 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதற்கான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சதன் பிராபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Exit mobile version