பரமக்குடி- தனுஷ்கோடி நான்கு வழிசாலை விரிவாக்க பணிகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளன.
மதுரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி முதல் தனுஷ்கோடி வரையிலான 113 கிலோ மீட்டர் தொலைவை நான்கு வழிசாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து முதற்கட்ட பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை உள்ள 17 கிராமங்களில் 12 லட்சத்து 47 ஆயிரத்து 385 சதுர மீட்டர் நிலங்கள் கையகப்படுத்தபடவுள்ளது. இதற்காக நில உரிமையாளர்களிடம் ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் விசாரணை முகாம் ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் ராமசாமி தலைமையில் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நிலம் அளிப்பவர்கள் தங்களுடைய சொத்தின் தாய் பத்திரம், தற்போதைய பத்திரம், வில்லங்க சான்று, ஆதார் சான்றுகளை உள்ளிட்டவற்றை நிலமெடுப்பு அதிகாரிகளிடம் சமர்ப்பிர்த்து வருகின்றனர்.