புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் பணியாற்றும் ஊழியர்கள் 2 ஆண்டு நிலுவை ஊதியத்தை வழங்கிட வலியுறுத்தி, குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் இயங்கி வரும் பாப்ஸ்கோ நிறுவனத்தின் 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், ஊழியர்களுக்கு கடந்த 20 மாதங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளது. இதனைக் ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்க 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த நிதி இதுவரை வழங்கப்படவில்லை என கூறி ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.