திருவண்ணாமலையில் குறைந்த செலவில், அதிக லாபம் தரும் பப்பாளி

திருவண்ணாமலையில், குறைந்த செலவில், அதிக லாபம் கிடைப்பதால், பப்பாளி பயிரிடுவதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆர்பாக்கத்தில் அதிகளவு பப்பாளியை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்தாண்டு போதிய அளவு பருவ மழை இல்லாததால் குறைந்த அளவு நீரில் விளையக்கூடிய பப்பாளியை விவசாயிகள் ஆர்வமுடன் பயிரிட்டு வருகின்றனர். ஏக்கர் ஒன்றிற்கு 70 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும், ஒரு நாளைக்கு 300 கிலோ அறுவடை செய்யப்படுவதாகவும், தற்போது கிலோ பப்பாளி 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாவதால் ஆண்டிற்கு 7 லட்ச ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version