குன்னூர் ராணுவ கல்லூரி கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தைகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ கல்லூரி வளாகத்தில் சிறுத்தைகள் நடமாடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய படைகளின் அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. வெலிங்டன் ராணுவ கல்லூரியில்இந்தியாவின் நட்பு நாடுகளின் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் ராணுவ கல்லூரி வளாகத்தில் இரவு நேரத்தில் 2 சிறுத்தைகள் நடமாடியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து வனத்துறையினர், சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version