மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் சமாதா நகரில் ஷாப்பிங் மால் ஒன்று உள்ளது. இங்கு எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதன் அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றின் cctv கேமரா காட்சிகளை பார்த்தப் போது அந்த ஹோட்டல் நிர்வாகிகள்அதிர்ச்சியடைந்தனர்.
சிறுத்தை ஒன்று சர்வசாதாரணமாக நடமாடும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன. உடனே தானே நகரின் பேரிடர் மீட்பு படைக்கு தாவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அந்த நகருக்கு வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் 2 மணி நேரம் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை. அது எங்கிருந்து வந்தது என்ற தகவலும் தெரியவில்லை.
தானே நகருக்கு வந்த சிறுத்தை கோரம் ஷாப்பிங் மாலுக்கு செல்கிறது. பின் கார் பார்க்கிங் பகுதிக்கு சென்று சுற்றித்திரிவது போல காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .