கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்களை மடக்கிப் பிடித்து வழக்குபதிவு செய்தகொண்டிருந்த போலீசார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் திடீரென சைக்கிளில் ஹீரோ போல மாஸ் என்டரி கொடுத்த 8 வயது சிறுவனை கண்டு அதிர்ச்சிப் புன்னகை பூத்தனர்.
சிறுவனை விசாரித்த போலீசாருக்கு மற்றும் ஒரு பேரதிர்ச்சி, சிறுவனின் பதிலில்.
தன்னுடைய அப்பா வந்தால் போலீசார் பிடித்துவிடுவர் என்பதால், தான் மளிகை பொருட்கள் வாங்க வந்ததாக கூறியுள்ளான்.
என்ன செய்வது என்று தெரியமால் திகைத்த போலீசார், வேறு வழியின்றி, சிறுவனை புன்னகையுடன் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.