பனிமய மாதா பேராலய திருவிழா தொடங்கியது!

தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின், 438-ஆவது திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஆகஸ்ட் 5 வரை 10 நாட்கள் நடைபெறும். விழாவை காண லட்சக்கணக்கானோர் வருவது வழக்கம். இந்த நிலையில், பனிமய மாதா பேராலயத்தின், 438-ஆவது திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களின்றி கொடியேற்ற விழா நடைபெற்றது. காலை 7 மணிக்கு கொடியேற்ற திருப்பலி நடைபெற்று, மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் தலைமையில் சிறப்பு ஜெபம் செய்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

Exit mobile version