பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான முருகன் – தெய்வானை திருக்கல்யாணம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி வலம் வந்தார்.
கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுந்தனர். கொரோனா அச்சுறுத்தலால் கடந்தாண்டு தேரோட்டம் நடைபெறாத நிலையில், ஓராண்டுக்கு பிறகு நடைபெறும் தேரோட்டத்தில் வெளி மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.