மார்ச் மாத, அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு தொடர்பாக, அதிமுக ஆலோசனைக் கூட்டம்

மார்ச் மாதம் நடக்க உள்ள அதிமுகவின் பிரமாண்ட மாநாடு தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மார்ச் 6ம் தேதி, அதிமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சென்னை வண்டலூரில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது தொடர்பாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், மாநாட்டை சிறப்பாக நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக, கூட்டம் நடைபெறும் இடத்தில், ஏற்பாடுகள் குறித்து, ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Exit mobile version