பாண்டா கரடிகளை போன்று தோற்றமளிக்கும் நாய்க்குட்டிகள்

சீனாவின் சிச்சுவான் மாகணத்தில் உள்ள வளர்ப்பு பிராணிகள் நிலையத்தில் வளரும் நாய்குட்டிகளுக்கு வர்ணம் பூசி அச்சு அசலாக பாண்டா கரடிகளை போல் பணியாளர்கள் மாற்றியுள்ளனர்.

செங்டு நகரில் உள்ள இந்த வளர்ப்பு பிராணிகள் நிலையத்தில், பாண்டா கரடிகளை போன்ற உடல்வாகுக் கொண்ட நாய் குட்டிகளை வர்ணம் பூசி அச்சு அசலாக பாண்டா கரடிகளை போலவே பணியாளர்கள் மாற்றியுள்ளனர். இந்த பாண்டா நாய்க்குட்டிகளின் படங்களும், வீடியோக்களும் சமூல வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த பாண்டா நாய்க்குட்டிகளை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். இருப்பினும் பணியாளர்களின் இத்தகைய செயலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனமும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வண்ணம் பூசுவது நாயின் முடி மற்றும் தோலுக்கு தீங்கு விளைவிக்கும் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version