ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உயிரியல் பூங்காவில் பாண்டா கரடிகளின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு பாண்டாக்களில் பெண் பாண்டா டிங்டிங் மூன்று வயதும், ஆண் பாண்டா ரூயிக்கு இரண்டு வயதும் ஆகும். உயிரியல் பூங்காவில் இதனை பராமரித்து வரும் மேலாளர் ஸ்வெட்லானா கூறுகையில், இந்த இரண்டு பாண்டாக்களும் வேறுபட்டவைகள் என்றும், டிங்டிங் பெண் பாண்டாவின் உண்மையான பெண்ணை போன்ற செயல்கள் அனைவரையும் பெரிதும் கவர்ந்து வருவதாக தெரிவித்தார். இதனை ரஷ்ய அதிபர் விளாடிமின் புதினின் சுற்றுப்பயணத்தின் போது இளம் பாண்டாக்களை ரஷ்யாவிடம் சீனா ஒப்படைத்தது . இந்த பாண்டாக்கள் அடுத்த 15 ஆண்டுகளுக்கு உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட உள்ளதாகவும், இதனையடுத்து இந்த இரண்டு பாண்டாக்களும் விஞ்ஞான திட்டத்தின் ஒரு பகுதியாக இனங்கள் பாதுகாக்கப்படுவதற்கான வழிகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றை காட்டுக்குள் அனுப்பப்பட உள்ளன.