அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பொறுப்புகள் ரத்து!

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அதி.மு.க.வில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட, ஒன்றிய அதிமுக அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ஊராட்சி அதிமுக செயலாளர் பொறுப்புகள் இன்று முதல் ரத்து செயப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி அதிமுக செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் விரைவில் மாற்றுப் பொறுப்பு வழங்கப்படும் என அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version