பாமாயில் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதாக கூறும் கடலூர் மாவட்ட விவசாயிகள், சாகுபடிக்கு அனைத்து விதமான உதவிகளை வழங்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
வாழை, கரும்பு போன்ற பயிர்களை ஒப்பிடும் போது பாமாயில் சாகுபடிக்கு குறைந்த அளவு நீரே தேவைப்படுகிறது. மேலும், மத்திய அரசு திட்டத்தின் மூலம் ஏக்கருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் மானியமும், பாமாயில் வளர்ச்சி அடையும் வரை மூன்று வருடத்திற்கு தேவையான உரங்களையும் இலவசமாக வழங்கி வருகிறது. பிப்ரவரி மாதம் முதல் அறுவடை துவங்கும் பாமாயில் மரத்திலிருந்து 500 முதல் 1000 கிலோ வரை காய்கள் அறுவடை செய்யப்படுவதாக கூறும் விவசாயிகள் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.