பல்லாவரம் உதவி ஆணையாளர் ஈஸ்வரன் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை பல்லாவரம் உதவி ஆணையாளர் ஈஸ்வரன் வயது 52 அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக இன்று 13.05.2021 மதியம் சுமார் 13.45 மணிக்கு இயற்கை உயிரிழந்தார்.

கொரோனா தொற்று காரணமாக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் கடந்த 5 தேதி அனுமதிக்கப்படார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கொளத்தூரில் சொந்த வீடு உள்ளது. தேர்தலுக்கு முன்பாக வேப்பேரி காவல் நிலைய உதவி ஆணையராக பணியாற்றி வந்த ஈஸ்வரன் தேர்தல் பணிக்காக பல்லாவரம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தற்போது அவர் பல்லாவரம் காவல் சரக உதவி ஆணையராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version