கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்…

கோவையில், கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தினமும் கொரோனா தொற்றால் 200க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

இதனால், கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்று கிழமைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர, அனைத்து கடைகளும் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட தடை
விதிக்கப்பட்டுள்ளது.

சந்தைகளில் வியாபாரிகள் 50 சதவிகித கடைகள் சுழற்சி முறையில் திறந்து கொள்ளலாம் என்றும், வாரச் சந்தைகளுக்கான தடை தொடரும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, ஞாயிற்று கிழமைகளில் பேக்கரி மற்றும் உணவகங்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காந்திபுரம் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

Exit mobile version