இஸ்ரேல் தலைநகர் மீது பாலஸ்தீன படைகள் சரமாரி ராக்கெட் தாக்குதல்

 

இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் மீது, பாலஸ்தீன காசா படைகள் சரமாரியாக ராக்கெட் தாக்குதலை நடத்தின. ஒரு வாரத்திற்கு மேலாக தாக்குதல் தொடருவதால், இஸ்ரேல்- பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் காணப்படுகிறது. பாலஸ்தீனியர்களின் ஹமாஸ் படைகள் காசாவில் பதுங்கியிருந்த இடத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 83 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பழிக்கு பழிவாங்கும் விதமாக, இஸ்ரேல் நகரங்கள் மீது பாலஸ்தீன படையினர் தினமும் டஜன் கணக்கில் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதனால், பல கட்டடங்கள் சேதம் அடைந்தன. மேலும், வன்முறையில் ஈடுபட்ட 374 பேரை இஸ்ரேல் காவல்துறையினர் கைது செய்தனர்.

Exit mobile version