பழனி தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியதை அடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற பிப்ரவரி 7ம் தேதி மாலையும், பிப்ரவரி 8ம் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது. பத்து நாட்கள் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

Exit mobile version