பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி-முன்பதிவு செய்து முறையாக தரிசனம் பெற நினைப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்…

பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்‌ பக்தர்கள்‌ 05.07.2021 நாள் காலை
6.00 மணி முதல்‌ இரவு 8.00 மணி வரை  அனுமதிக்கப்பட உள்ளனர்‌.

பக்தர்களின்‌ நலன்‌ கருதி இத்திருக்கோயிலின்‌ குடமுழுக்கு விழா நினைவரங்கத்தின்‌ வழியாக சென்று படிப்பாதையை அடைந்து
தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்‌. பக்தர்கள்‌ செல்லும்‌ வழியில்‌ உடல் வெப்பநிலை(Termal Scanner) சோதனைக்குட்படுத்தப்பட்டு நோய்‌ அறிகுறிகள்‌ இல்லாதவர்கள்‌ மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்‌.

திருஆவிணன்குடி திருக்கோயிலிலும்‌ ஒருவழிப்பாதையாக சென்று சுவாமி தரிசனம்‌ செய்ய அனுமதிக்கப்படுவார்கள்‌.


சளி, இருமல்‌, காய்ச்சல்‌ உள்ளவர்கள்‌ திருக்கோயிலுக்குள்‌ அனுமதிக்கப்படமாட்டார்கள்‌. திருக்கோயிலுக்கு வருகை தரும்‌ பக்தர்கள்‌ அனைவரும்‌ கண்டிப்பாக முகக்கவசம்‌ அணிந்திருக்க வேண்டும்‌. முகக்கவசம்‌ அணியாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இணைய வழி முன்‌ பதிவு அனுமதி சீட்டு உள்ள நபர்கள்‌ மட்டுமே மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்‌. இணைய வழி பதிவு இல்லாதவர்கள்‌ நேரில்‌ வந்தால்‌ இணையவழி பதிவு செய்தவர்கள்‌ வராத பட்சத்தில்‌ மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்‌. திருக்கோயிலின்‌ மலைக்கோயிலில்‌ ஒரு மணி நேரத்திற்கு 1000 பக்தர்கள்‌ மட்டுமே தரிசனம்‌ செய்ய அனுமதிக்கப்படுவர்‌.

இத்திருக்கோயிலின்‌ இணையதள முகவரி www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை தேர்வு செய்து அதில்‌ தரிசன முன்பதிவு செய்து திருக்கோயில்‌ அமைந்துள்ள மாவட்டமான திண்டுக்கல்‌ மாவட்டத்தை தேர்ந்தெடுத்து திரையில்‌ தோன்றும்‌ இத்திருக்கோயிலுக்கான தரிசன முன்பதிவு உள்ளே சென்று இலவச மற்றும்‌ கட்டண தரிசனத்தில்‌ தங்களுக்கு தேவையான தேதியில்‌ முன்பதிவு செய்து கொள்ளலாம்‌.

இணையதள வசதி இல்லாத சாதாரண கைபேசி வைத்திருக்கும்‌ பக்தர்கள்‌ 04545-242683 என்ற தொலைபேசி எண்ணில்‌ தொடர்பு கொண்டு பெயர்‌, முகவரி, தொலைபேசி எண்‌ மற்றும்‌ ஆதார்‌ எண்‌ தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ள
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்திற்கு முந்தைய நாள்‌ மட்டுமே முன்பதிவு செய்யப்படும்‌. மேற்படி முன்பதிவு கிராம பகுதிகளிலிருந்து வரும்‌ அழைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்‌. தினசரி காலை 10.00 மணி முதல்‌ ந்ண்பகல் 01.00
மணி வரையிலும்‌, பிற்பகல்‌ 02.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரையிலும்‌ முதலில்‌ வரும்‌ 200 அழைப்புகள்‌ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌. இப்பதிவின்‌ வழியாக தரிசனத்திற்கு வரும்‌ பக்தர்கள்‌ ஆதார்‌ அடையாள அட்டை கட்டாயமாக
கொண்டு வர வேண்டும்‌.

அபிஷேக பஞ்சாமிர்தம்‌ மற்றும்‌ முறுக்கு, அதிரசம்‌, லட்டு, சர்க்கரைப்பொங்கல்‌ மற்றும்‌ புளியோதரை உள்ளிட்ட
பிரசாதங்கள்‌ பாதுகாப்பான முறையில்‌ தயார்‌ செய்யப்பட்டு மலைக்கோயிலில்‌ பக்தர்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விற்பனை செய்யப்படும்‌ பிரசாதங்கள்‌ அனைத்தும்‌ பேப்பர்‌ கவர்களுடன்‌ கொண்டு செல்லும்‌ வகையில்‌ வழங்கப்படுகிறது. பிரசாதங்களை திருக்கோயில்‌ வளாகத்தில்‌ அமர்ந்து உண்ணுவதற்கு அனுமதி கிடையாது.அன்னதானம்‌ பொட்டலங்களாக வழங்கப்படவுள்ளது. அன்னதான பொட்டலங்களை திருக்கோயில்‌ வளாகத்தில்‌ அமர்ந்து உண்ணுவதற்கு அனுமதி கிடையாது.

பக்தர்கள்‌ தேங்காய்‌, பூ, பழம்‌ ஆகியவற்றை கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை. காலபூஜை மற்றும்‌ அபிஷேகம்‌ நடைபெறும்‌ பொழுது உபயதாரர்கள்‌ உட்பட பக்தர்கள்‌ உள்ளே அமர்ந்து சுவாமி தரிசனம்‌ செய்ய அனுமதி கிடையாது.பக்தர்கள்‌ படிப்பாதை மற்றும்‌ யானைப்பாதையினை மட்டுமே பயன்படுத்தி மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்‌.

மின்‌இழுவை இரயில்‌ (WINCH)இயக்கப்படும்‌. கம்பிவட ஊர்தி (ROPECAR) சேவை இல்லை. மலைக்கோயிலுக்கு வருகை தரும்‌ பக்தர்கள்‌ அரசு அறிவித்துள்ள வழிபாட்டுத்‌தலங்களில்‌ பின்பற்றப்பட வேண்டிய நிலையான இயக்க நெறிமுறைகளை 50%
முறையாக பின்பற்றுவதை உறுதி செய்த பின்னர்‌ கம்பிவட ஊர்தி சேவை இயக்கப்படும்‌.

சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம்‌ செய்ய வேண்டும்‌. தங்கரதம்‌ மற்றும்‌ தங்கத்தொட்டில்‌ ஆகிய சேவைகள்‌ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முடிக்காணிக்கை செலுத்த வரும்‌ பக்தர்கள்‌ தேவஸ்தான முடிக்காணிக்கை மண்டபத்தில்‌ உரிய பாதுகாப்பு அம்சங்களுடன்‌ முடிக்காணிக்கை செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்‌.முடிக்காணிக்கை செலுத்தவரும்‌ பக்தர்கள்‌ இருப்பிட விபரம்‌ மற்றும்‌ தொலைபேசி எண்‌ணை தெரிவிக்க வேண்டும்‌.முடிக்காணிக்கை செலுத்த வரும்‌ பக்தர்‌ மட்டுமே முடிமண்டபத்திற்குள்‌ செல்ல அனுமதிக்கப்படுவர்‌.

சுவாமி தரிசனத்திற்கு நோய்‌ அறிகுறிகள்‌ உள்ளவர்கள்‌, 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்‌, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்‌, கர்ப்பிணி பெண்கள்‌ திருக்கோயிலுக்கு வருகை தருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பை செய்தியாளர் வாயிலாக கேட்டுப்பெற …

 

 

Exit mobile version