திண்டுக்கல் மாவட்டம் பழநி அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் காந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
பழநியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அதிகாலை முதல் வரிசையில் நின்றவர்களுக்கு தடுப்பூசி இல்லை என்ற செய்தி மட்டும் வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினமும் காலையில் வந்து நிற்பதும், திரும்பி செல்வதும் தொடர் கதையாக இருப்பதாக பொதுக்கள் தெரிவிக்கின்றனர்.
தடுப்பூசி எப்போது செலுத்தப்படும், எத்தனை பேருக்கு செலுத்தப்படும் என்பது குறித்த அறிவிப்புகள் இல்லாததே அலைகழிக்கப்படுவதற்கு காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.