ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் பாலக்காடு – திருச்சி பயணிகள் ரயில் சேவையை திருப்பூர் எம்.பி சத்தியபாமா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில், ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் நின்று செல்ல அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எம்.பி. சத்தியபாமா, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், பாலக்காடு-திருச்சி ரயில் ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன் துவக்க விழா நிகழ்ச்சியை எம்.பி.சத்தியபாமா, கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.