பாகிஸ்தானின் சிறிய ரக உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

ராஜஸ்தானில் பாகிஸ்தான் நாட்டின் ஆளில்லா சிறியரக உளவு விமானத்தை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தினர்

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. தரை மற்றும் வான் வழியாக பாகிஸ்தான் ஊடுருவ தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்திய தரப்பில் இதற்கு தக்க பதிலடி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீகங்காநகர் பகுதியில் இந்திய வான் எல்லையில் பறந்த பாகிஸ்தான் நாட்டின் ஆளில்லா சிறியரக உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்திய எல்லையில் பறந்ததாக கடந்த 15 நாட்களில் பாகிஸ்தானுக்கு சொந்தமான 3 சிறியரக உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

Exit mobile version