மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தான் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளார்.
2008-ம் ஆண்டு மும்பைக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றனர். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தான் என்ற இந்தியாவின் வாதத்தை பாகிஸ்தான் அரசு ஏற்காமல் மறுத்து வந்தது.
இந்தநிலையில் பிரபல ஆங்கில இதழ் ஒன்று பேட்டியளித்திருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், மும்பை தாக்குதலை நிகழ்த்தியது பாகிஸ்தான் என ஒப்புக்கொண்டுள்ளார். இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விபரங்களை கேட்டியிருப்பதாக கூறியிருக்கும் இம்ரான்கான், மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளை தண்டிக்க தனது தலைமையிலான அரசு விரும்புவதாக தெரிவித்துள்ளார்.