உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதிய 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 46 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது. துவக்க வீரர் கப்தில் 5 ரனகளும், கொலின் முன்றோ 12 ரன்களும், ராஸ் டெய்லர் 3 ரன்னும், டாம் லாதம் 1 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். கேன் வில்லியம்சன் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் கிராண்ட்ஹோம் 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்ட்டானார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் நீஷம் 97ரன்களும், சான்ட்னெர் 5 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் சேர்த்தது.