ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர்! ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

pakistan vs hong kong

ஆசிய கோப்பை தொடரின் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 193 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 78 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஹாங்காங் அணி 38 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வியடைந்தது. 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, சூப்பர் – 4 சுற்றுக்குள் நுழைந்தது.

Exit mobile version