சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக 2 பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் அண்மையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஐநா மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து இந்திய விமானப்படை சார்பில் நடத்தப்பட்ட பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்பட்டுவந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து, பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன.
இந்த நிலையில், லஷ்கர் – இ – தொய்பாவின் கிளை அமைப்புகளான ஜமாத் உத் தவா, ஃபலா – இ – இன்சனியத் ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.