வான்வெளி மூடப்பட்டதால் ரூ.850 கோடி நஷ்டம்-பாகிஸ்தான்

பாகிஸ்தான் தனது வான்வெளிகளை மூடியதால், 850 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர், குல்காம் சர்வார் கான் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தற்கொலை படை தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோடு பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து , தனது வான் எல்லைகளை பாகிஸ்தான் மூடியது இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் சர்வதேச விமானங்கள், நீண்ட தூரம் சுற்றிச் சென்றன. பாகிஸ்தானிலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குர்தாஸ்பூர் பேச்சுவார்த்தைக்கு பின் இந்த தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது. இது தொடர்பாக, கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய, பாகிஸ்தான், விமான போக்குவரத்து துறை அமைச்சர், குல்காம் சர்வார் கான், வான்வெளிகளை மூடியதால், பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறைக்கு, 850 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version