காஷ்மீர் பிரச்சினைக்காக பாகிஸ்தான் கவலைப்பட வேண்டாம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் சென்றார்…

லடாக் சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அப்பகுதியில் நிலவும் சுழல் குறித்து உள்ளூர் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து லாடக்கில் உள்ள லே பகுதிக்குச் சென்ற அவர், அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நிவரான பொருட்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், தொடர்பில்லாத காஷ்மீர் பிரச்சனைக்காக பாகிஸ்தான் ஏன் இப்படி அழுகிறது என்றும், பாகிஸ்தான் கவலைப்பட காஷ்மீர் ஒன்றும் அவர்களுடையது அல்ல என்றும் தெரிவித்தார்…

Exit mobile version