பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை வேடம் போடுவதால், பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய ராணுவ நிதியுதவியை நிறுத்திக்கொள்வதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.
தலிபான், லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அமெரிக்கா ராணுவ நிதியுதவியையும் பாகிஸ்தானுக்கு வழங்கி வருகிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், பாகிஸ்தான் பிரதமர் இமரான் கானுக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வந்தன. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய, 21 ஆயிரம் கோடி ரூபாயை அமெரிக்க நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.