சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

நாடு முழுவதும் 73வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பூஞ்சிலுள்ள கே.ஜி செக்டார் வனப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியதோடு தாக்குதலும் நடத்தியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தான் ராணுவம் தொடர்  அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக கூறிய ராணுவ அதிகாரிகள், பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.  பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை அடுத்து எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

Exit mobile version