பாகிஸ்தானை புரட்டிப்போட்ட வெள்ளம்! பிரசவிக்கவுள்ள 47,000 கர்ப்பிணிப்பெண்கள் முகாம்களில் தங்கவைப்பு!

pakistan flood damage

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக நிவாரண முகாம்களில் சுமார் 47,000 கர்ப்பிணிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்குப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்நாடு நீரில் தத்தளித்து வருகிறது. இதுவரை 3 கோடிபேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அந்நாட்டில் 73,000 பேர் செப்டம்பர் மாதமான இம்மாதத்தில் பிரசவிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை 47,000 கர்ப்பிணிப் பெண்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version