பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக நிவாரண முகாம்களில் சுமார் 47,000 கர்ப்பிணிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்குப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்நாடு நீரில் தத்தளித்து வருகிறது. இதுவரை 3 கோடிபேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அந்நாட்டில் 73,000 பேர் செப்டம்பர் மாதமான இம்மாதத்தில் பிரசவிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை 47,000 கர்ப்பிணிப் பெண்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.