பாகிஸ்தானில் நாட்டில், இந்து பெண் மருத்துவ கல்லூரி ஹாஸ்டலில் துணியால் கழுத்து நெறிக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்துள்ளார்.
பாகிஸ்தானின் உள்ள, சிந்து மாகாணத்தில் ஏராளமான இந்துக்கள் வாழ்கின்றனர். இந்த மாகாணத்தில் கோட்கி நகரை சேந்தவர் நம்ரிதா சந்தாரி. இவர் ஒரு இந்து பெண். மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், ஹாஸ்டலில் இருந்து படித்து வருகிறார். திடீரென்று ஓரு நாள் ஹாஸ்டலில் துணியால் கழுத்து நெறிக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அதை போலீஸ் தற்கொலை என வழக்கு பதிவு செய்தனர்.
இவருடைய உறவினர் நம்ரிதா சந்தாரி தற்கொலை செய்யும் அளவுக்கு, அவ்வளவு கோழை ஓன்றும் கிடையாது. இது கொலை.அதலால், நியாயமாக விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்