பிரதமரின் கருத்தை புறக்கணித்த பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் செயல் வருத்தம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமரின் நெருங்கிய உதவியாளர் நயீம் உல் ஹக் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன் “பாகிஸ்தான் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யலாம்” என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால் அணி நிர்வாகம் டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணிக்கு பிரதமரின் நெருங்கிய உதவியாளர் நயீம் உல் ஹக் வருத்தம் தெரிவித்துள்ளார். “நம்முடைய chasing record சிறப்பாக இல்லாத போதிலும், பாகிஸ்தான் அணி chasing எடுத்தது தவறு” என்று கூறியுள்ள அவர், “இதன் காரணமாகவே பிரதமர் இம்ரான் கான் முதலில் பேட்டிங் செய்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்” என்று நயீம் உல் ஹக் கூறினார்.