ஊழல் வழக்கில், போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃபின் மகள் மரியம் நவாசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2006-ஆம் ஆண்டு தாக்கல் செய்த சொத்து தொடர்பான ஆவணங்களில் பொதுப் பயன்பாட்டில் இல்லாத “கேலிப்ரி’ எழுத்துகள் பயன் படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ஆவணம் போலியானது எனக் கூறி மரியம் நவாசுக்கு எதிராக பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முதலில் தீர்ப்பை ஒத்திவைத்தது. பின்னர் மரியம் நவாசுக்கு எதிரான அந்த மனு தள்ளு படி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக, நீதிமன்றத்துக்கு வெளியே மரியம் நவாஸின் ஆதரவாளர்கள் பலர் திரண்டு அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றப் பகுதியில் அமைதியை சீர்குலைத்ததாக காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.