பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 121 பேர் கைது

பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 121 பேரை கைது செய்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு சர்வதேச நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிரது. தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரின் மகன், சகோதரர் உள்பட 44 பேரை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்பை செர்ந்த 121 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், 182 மதரஸாக்களையும் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது

Exit mobile version