எல்லையில் பாகிஸ்தான் திடீரென நடத்திய தாக்குதலில் இருந்து, பள்ளி மாணவ, மாணவியர்களை இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தார் மற்றும் பால்க்கோட் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சிறு பிரங்கிகள் மூலம் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது அங்கு விரைந்த இந்திய ராணுவ படையினர், பள்ளிக் குழந்தைகள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் பத்திரமாக மாற்று இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் பதற்றம் காரணமாக இந்திய ராணுவ வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.