காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர், 3 தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன.காஷ்மீரின் தங்தார் என்னுமிடத்தில் ஊடுருவல்காரர்களை உள்ளே அனுப்பும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். இந்திய ராணுவத்தினர் அதைத் தடுக்க முயன்றபோது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர்கள்2 பேர் வீரமரணம் அடைந்தனர். அப்பாவி பொதுமக்களில் ஒருவர் மரணமடைந்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த, இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே எதிர்தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாய நிலையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது என்றும், இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 10 பேரும் பயங்கரவாதிகள் பலரும் பலியாகினர் என தெரிவித்தார்.