காஷ்மீரில் உள்ள ராஜோரி மாவட்டம் சுந்தர்பானி பகுதியில், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தான் ராணுவம் எல்லை அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் சுந்தர்பானி இடத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மாலை 4 மணியளவில் தொடங்கிய இந்த தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் பின் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.