இந்தியாவின் உயிர்காக்கும் மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுடன் அனைத்துவித வர்த்தக உறவுகளையும் பாகிஸ்தான் முறித்துக் கொண்டது. பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதுடன் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரையும் திரும்ப அழைத்துக் கொண்டது. இருநாடுகளுக்கிடையே சூழ்நிலை நாளுக்குநாள் மோசமாகி வந்தது.இந்நிலையில் உயிர்காக்கும் மருந்து பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய பாகிஸ்தான் வர்த்தகத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 16 மாதங்களில், இந்தியாவில் இருந்து 36 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு உள்ள ரேபிஸ் நோய் தடுப்பு மற்றும் விஷ முறிவு மருந்துகளை பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.